KAMARAJAR GOVERNMENT ARTS COLLEGE SURANDAI, TENKASI
627 859

        

Kamarajar Government Arts College

Surandai, Tenkasi - 627 859

Vision & Mission

Vision & Mission

Vision

To impart high quality and competency-based education to the unreached segments of economically poor and socially oppressed students and enable them to face the challenges across the globe with confidence and ease

Mission

To mold the students highly humane, well-disciplined, impeccable and efficient individuals through value-based education To discover the inherent and hidden talents of the students and encourage them to take part actively in various intramural competitions. To infuse our motto ‘strive to succeed’ in the young minds and enhance their aims and aspirations through innovative and traditional pedagogy.

Motto

Unmai(Truth) Ulaippu(Hardwork) Uyairvu(Success)

PG Admission - Regarding

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமே விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது. மாணவ மாணவிகள் நேரில் வர தேவையில்லை என கல்லூரி முதல்வர் அறிவிப்பு.
 
இளநிலை UG தேர்ச்சி அடைந்த மாணவ மாணவியர்களுக்கு 2020− 21 ஆம் ஆண்டின் கலை மற்றும் அறிவியல் முதுநிலை PG பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு
தமிழ்
ஆங்கிலம்
பொருளாதாரம்
வணிகவியல்
கணினி அறிவியல்
கணிதம்
இயற்பியல்
வேதியியல்
நுண்ணுயிரியல்
மின்னனுவியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடங்களுக்கு ஆன்லைன் மூலமாக இன்று 10.10.2020 முதல் நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் இன்டர்நெட் வசதியுள்ள தங்களது கைபேசி மற்றும் தங்கள் பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட பொது சேவை மையங்களை அணுகி தங்களது விவரங்களை
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள www.tngasapg.in மற்றும்
www.tngasapg.org என்ற இணையதள வாயிலாக சென்று கேட்கப்படும் விவரங்களை உட்செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூபாய் 58. பதிவு கட்டணம் ரூபாய் 2., எஸ்சி.எஸ்டி(SC/ST) பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை .பதிவு கட்டணம் ரூ 2 மட்டும் கட்டினால் போதும். இணையதளம் வாயிலாக பதிவு செய்ய இறுதி நாள் 20.10.2020 ஆகும். பதிவு செய்தவர்கள் சான்றிதழ்களை 15.10.2020 முதல் 20.10 .2020 வரை www.tngasapg.in என்ற இணையதளத்தில் உள்ள அட்டவணைப்படி பதிவேற்றம் செய்யலாம். இறுதிநாள் 20.10.2020 ஆகும்
 
கண்டிப்பாக விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படமாட்டாது. எனவே கல்லூரிக்கு யாரும் நேரில் வர தேவையில்லை. இணைய தளம் வாயிலாக விண்ணப்பம் அனுப்ப இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.நமது கல்லூரியில் மாவட்ட சேவை மையத்திற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக 9786567801 மற்றும் 9600451716 ஆகிய கைபேசிஎண்களை தொடர்பு கொள்ளலாம்.கல்லூரியில் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவுசெய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044−22351014,044−22351015 மற்றும் 044−28276791 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் பெறலாம்.இது தொடர்பாக [email protected] மற்றும் [email protected] என்ற email முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களைக் கேட்டு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.இவ்வாறு கல்லூரி முதல்வர் முனைவர்.பாஸ்கரன்கூறியுள்ளார்.