ONLINE APPLICATION FOR UG COURSES
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமே விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது. மாணவ மாணவிகள் நேரில் வர தேவையில்லை.
பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த மாணவ மாணவியர்களுக்கு 2021− 22 ஆம் ஆண்டிற்கான கலை &அறிவியல் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு
தமிழ்
ஆங்கிலம்
பொருளாதாரம்
வணிகவியல்(I & IIசுழற்சிகள்)
வணிகநிர்வாகவியல்
(I&II சுழற்சிகள்)
கணினி அறிவியல்
(I&II சுழற்சிகள்)
கணிதம்
இயற்பியல்
வேதியியல்
நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களுக்கு ஆன்லைன் மூலமாக இன்று 26-7-2021முதல் 10.8.2021 முடிய நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் இன்டர்நெட் வசதியுள்ள தங்களது கைபேசி மற்றும் தங்கள் பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட பொது சேவை மையங்களை அணுகி தங்களது விவரங்களை
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள www.tngasa.in மற்றும்
www.tngasa.org என்ற இணையதள வாயிலாக சென்று கேட்கப்படும் விவரங்களை உட்செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூபாய் 48. பதிவு கட்டணம் ரூபாய் 2., எஸ்சி.எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை பதிவு கட்டணம் ரூபாய் 2 மட்டும் கட்டினால் போதும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இறுதி நாள் 10-8-2021ஆகும்.
கண்டிப்பாக விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படமாட்டாது. எனவே கல்லூரிக்கு யாரும் நேரில் வர தேவையில்லை. இணைய தளம் வாயிலாக விண்ணப்பம் அனுப்ப இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.நமது கல்லூரியில் சேவை மையத்திற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக 044 22351014, 044 22351015,04633 260882,9786567801 மற்றும் ஆகிய தொலைபேசிஎண்களை தொடர்பு கொள்ளலாம்.கல்லூரியில் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.